தொலைந்து போன மொபைல் இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பது எப்படி?

இந்த நவீன யுகத்தில் அனைவரும் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர்.அனைவரின் கைகளிலும் தற்போது புகுந்து விளையாடுவது Samsung ஸ்மார்ட் போன்கள் தான்.

Samsung-Galaxy-S5-vs-Samsung-Galaxy-S4-01

உங்கள் விலை உயர்ந்த சாம்சங் தொலைபேசி தொலைந்து போகும்  போது உங்கள் மனநிலையை மிகவும் பாதிக்கும். அத்தோடு சேர்ந்து உங்கள் விலை மதிப்பற்ற தகவல்களும் தொலைந்து போதுவதும் பெரும் இழப்பை தங்களுக்கு ஏற்படுத்தும்.

வரு முன் காப்போம்

Samsung Smart Phone கள் தொலைந்து போனால் அதை எப்படி கண்டு பிடிப்பது அதை எவ்வாறு இருக்கும் இடத்திலிருந்தே இயக்குவது உள்ள விபரங்களை இங்கே வழங்கியுள்ளோம்.

இதற்கு உங்கள் தொலைபேசி ஒரு அன்ட்ராய்ட் ஸ்மார்ட் போனாக இருக்க வேண்டும். முதலில் உங்கள் தொலைபேசியை எதிர்கால நன்மை கருதி முன்னேற்பாடக தயார்படுத்த வேண்டும்.

அதற்கு பின்வரும் கட்டமைப்புக்களை உங்கள் போனில் பயன்படுத்தவும்.

remote-setting

1. Settings-> Location & Settings ->அங்கே Remote Controls என்பதில் Tick செய்யவும்.

2. அப்போது உங்கள் Samsung Account Username & Password என்பவற்றை உட்செலுத்த கேட்கும். ஏற்கனவே உங்களுக்கு Samsung பயனர் கணக்கு இல்லை எனில் புதிதாக ஒன்றை ஆரம்பிக்கவும்.

3.இப்போது விதிமுறைகள் (Conditions Agreement) பற்றிய பக்கம் காண்பிக்கப்படும். அதில் I agree என்பதை சொடுக்கவும்.

அவ்வளவு தான் இப்போது உங்கள் தொலைபேசி தயாராகி விட்டது. இப்போது உங்கள் தொலைபேசி தொலைந்தாலோ அல்லது உங்கள் வாழ்க்கை துணை , பிள்ளைகள் பயன்படுத்தினாலோ அது இருக்கும் இடம், பயணம் செய்த பாதை, அதன் அழைப்பு விபர பட்டியல் (call Logs) மற்றும் ஏராளமான விசயங்களை Track செய்ய செய்து கொள்ளலாம்.

http://findmymobile.samsung.com/login.do

மேற்கண்ட இணையதள முகவரிக்கு செல்லவும். அங்கே உங்கள் Samsung Account User Name மற்றும் Password ஐ கொடுக்கவும்.

அதில் கீழ்ண்டவாறு காண்பிக்கப்படும் அங்கே உங்கள் தொலைபேசி மொடல் காண்பிக்கப்படும்.

samsung-track-mobile

இந்த பக்கத்தில் உங்களுக்கு தேவையான கட்டுபடுத்தும் மற்றும் Track செய்யும் வேலைகளை செய்து கொள்ளமுடியும்

1. Locate My Mobile – இதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தொலைபேசியின் தற்போதைய இருக்கும் இடம் மற்றும் இறுதி 12 மணி நேரத்தில் உங்கள் தொலைபேசி எங்கெல்லாம் பயணித்தது என்ற விபரங்கல்ளை வரைபடத்தில் பார்க்கலாம்

where-is-my-mobile

2.Lock My Mobile- இதன் மூலம் கணிணி மூலமே உங்கள் தொலைபேசியை பயன்படுத்த முடியாதவாறு Lock செய்து கொள்ள முடியும்.

3.Ring My Mobile -உங்கள் மொபைல் சைலன்ட் மோடில்  இருந்தால் கூட ரிங் ஆகும்.

4.Call Logs -இறுதி ஒரு வாரம் உங்கள் தொலைபேசியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட மற்றும் receive ஆன அழைப்புகளின் தகவல்களை பெறலாம்

5. Wipe My Mobile- நீங்கள் செமித்து வைத்த தகவல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை அழிக்க கூடிய Factory Reset / Wipe Delete என்று அழைக்கப்படும் வேலைகளை செய்து கொள்ளலாம்.

சாம்சங் மொபைல் வைத்திருப்பவர்கள் இனி கவலைப்படத் தேவையில்லை. மொபைல் தொலைந்து போனால் எளிதில் கண்டு பிடித்து விடலாம்.

சில நேரங்களில் வீட்டில் எங்காவது மொபைலை வைத்து விட்டும் தேடுவோம் அந்த நேரம் பார்த்து மொபைல் சைலண்டில் இருக்கும், கண்டுபிடிக்க முடியாது. இனி அந்த கவலையும் வேண்டாம். கணிணி மூலம் சைலண்ட் மோடை எடுத்து விட்டு எளிதில் கண்டு பிடித்து விடலாம்.

குழந்தைகள் மற்றும் மனைவியிடம் செல்போன கொடுத்து விட்டு அவர்கள் எங்க இருக்கின்றார்கள். என்பதை நாம் எளிதில் காண்காணித்துக் கொள்ளலாம்.

வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்தை கண்காணிக்க  இந்த வசதி பெரும் உதவியாக இருக்கும்.

Related Posts