தொற்றுநோய் அல்லாத நோய்களினால் இறப்புக்கள் அதிகரிப்பதாக புற்றுநோய் வைத்திய நிபுணர் என்.ஜெயக்குமார் தெரிவித்தார்.மருத்துவ சங்கத்தின் மாநாடு தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பு யாழ். போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் விடுதியில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
நீரிழிவு நோய் உட்பட தொற்றாத நோய்களினால் தற்போது இறப்புக்கள் அதிகமாக ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த மாநாடு தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘நோய் வருமுன் காப்பது’ என்னும் தொனிப்பொருளில் 71ஆவது வருட மருத்துவ சங்கத்தின் மாநாடு நாளை வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெறவுள்ளது. 1941ஆம் ஆண்டில் முதன்முதலாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவ சங்கமானது, சமாதான காலத்தின் பின்பு தனது 71ஆவது வருட நிறைவை வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளது.
இந்த மாநாட்டில் 61 வைத்தியர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இங்கு நோய்கள் மற்றும் வாழ்க்கை முறைமை போன்ற விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன. சிரேஷ்ட வைத்தியர்களால் கருத்துரைகளும் வழங்கப்படவுள்ளன’ என்றார்.