தொப்பியை லண்டனுக்கு அனுப்பியவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சனை பொறிக்கப்பட்ட தொப்பியை விமானத் தபால் மூலம், லண்டனுக்கு அனுப்ப முற்பட்ட குற்றச்சாட்டில் கைதான மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆடிகல, சந்தேகநபர்களை மார்ச் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, இவர்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

இதுஇவ்வாறு இருக்க, சந்தேகநபர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என, அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

எனினும் இதனை நீதவான் நிராகரித்துள்ளார்.

Related Posts