தொடர் வேலைநிறுத்தத்துக்கு தயாராகின்றன தொழிற்சங்கங்கள்!!

நாளைமறுதினம் நாடுமுழுவதும் நடைபெறவுள்ள முழுக்கடையடைப்பு மற்றும் 24 மணித்தியால கூட்டுப் பணிப்புறக்கணிப்புக்கும் உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் தொடர் கடையடைப்பை நடத்துவதற்கு தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தீர்மானித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் செயலாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு இலவச பேருந்துகளை வழங்க இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

20-25 கிலோமீற்றர் தூரத்தில் இவ்வாறான போக்குவரத்துச் சேவைகளை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் இவ்வாறான இலவச பேருந்துகள் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts