தொடர் போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள்

யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வாசலில் கற்பூரம் ஏற்றியும் 108 தேங்காய் உடைத்தும் நேற்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் போராட்டம் நடத்தினர்.

யாழ். பல்கலைக்கழக ஊழியர்களும் தமது பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் சமீப நாட்களாக முன்னெடுத்து வருகின்றனர்.

நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களின் கல்வி சாரா ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts