தொடர்ந்து நான்காவது முறையாக சென். பற்றிக்ஸ் அணி சம்பியன்

482424_519044051466986_300619289_nயாழ்ப்பாணத்தில் பொன் அணிகள் என்று அழைக்கப்படும் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட துடுப்பாட்ட போட்டி நேற்று திங்கட்கிழமை சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 88 ஓட்டங்களால் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி அபார வெற்றியீட்டியது

யாழ்ப்பாணக் கல்லூரி அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதற்க்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய சென். பற்றிக்ஸ் அணி 46.3 பந்துபரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.

153 என்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி 30.2 ஓவரில் 64 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழக்க, 88 ஓட்டங்களால் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி அபார வெற்றியீட்டியது.

ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்தில் சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் போட்டியின் நாயகனாக சென். பற்றிக்ஸ் கல்லூரியின் வோஸிங்டன் லூவிஸ் லிவிங்டனும் சகலதுறை ஆட்டக்காரராக அதே அணியைச் சேர்ந்த பாலசிங்கம் தனுஷனும் சிறந்த களத்தடுப்பாளராக அதே அணியினைச் சேர்ந்த அஜித் டர்வினும், சிறந்த பந்துவீச்சாளராக யாழ்ப்பாணக் கல்லூரியைச் சேர்ந்த ஆர்.நிலக்ஸனும் தெரிவு செய்யப்பட்டனர்.

Related Posts