வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 03.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரை பார்ப்பதற்காக வந்திருந்த பெண் ஒருவர் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ள பெண் தற்போது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைய தினங்களில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவங்கள் அதிகமாக பதிவாகியிருந்ததுடன், இவற்றுக்கு பாதாள உலக குழுக்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றமை தெரியவந்துள்ளது.
இதேவேளை பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை இல்லாதொழிக்கும் விஷேட நடவடிக்கைகள் நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.