தொடரைக் கைப்பற்றியது தென் ஆபிரிக்கா

இலங்கை அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 5 க்கு 0 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்க அணி கைப்பற்றியது.

இரு அணிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற ஐந்தாவதும் இறுதியானதுமான போட்டியில் தென்னாபிரிக்க அணி 88 ஓட்டங்களால் வெள்ளி பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பபை தீர்மானித்தது.

இதன்படி,முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 06 விக்கட்டுக்களை இழந்து 384 ஓட்டங்களைப் பெற்றது. ஹாசீம் அம்லா மற்றும் டி கொக் ஆகியோர் சதமடித்து அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றனர்.

385 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கப்பட்டுக்களை இழந்து 296 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

புதுமுக வீரர் அசேல குணரட்ன ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அணியின் வெற்றியை உறுதி செய்ய அந்த சதம் உதவியாகவில்லை.

ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராக ஆம்லா (தென் ஆப்ரிக்கா) தெரிவு செய்யப்பட்டத்தோடு தொடரின் சிறப்பாட்டக்காரராக பிளிஸ்சிஸ் (தென் ஆப்ரிக்கா) தெரிவுசெய்யப்பட்டார்

Related Posts