தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு: 10 தொடரூந்து சேவைகள் இரத்து

தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தினர் 4 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதனால், 10 தொடரூந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றும் தொடரூந்து இயந்திர சாரதிகளின் சேவை காலம் நீடிக்கப்படாமை மற்றும் புதிய தொடரூந்து இயந்திர சாரதிகள் இணைத்து கொள்ளப்படாமை உள்ளிட்ட 4 கோரிக்கைகளை முன்வைத்து தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தினர் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பணிப்புறக்கணிப்பின் காரணமாக, கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை ஆரம்பமாகவிருந்த 10 தொடரூந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

மேலும், தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Posts