தொடரும் உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதல்!!

உக்ரைனிய ஆளில்லா விமானங்கள் சோச்சியில் உள்ள ஹெலிகாப்டர் தளம் மற்றும் ஸ்மோலென்ஸ்கில் உள்ள விமான தொழிற்சாலையை தாக்கியதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

உள்ளூர் ரஷ்ய சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளில் சோச்சியின் அட்லர் விமான தளத்திற்கு அருகே புகை மற்றும் வெடிப்புகளைக் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த காணொளியில் குறித்த தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த தாக்குதலின் பின்னணியில் உக்ரைனின் இராணுவ உளவுத்துறை (HUR) உள்ளது என Ukrainska Pravda தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான ஸ்மோலென்ஸ்கில் உள்ள விமானத் தொழிற்சாலை அரசு நடத்தும் தந்திரோபாய ஏவுகணை ஆயுதக் கழகத்தின் ஒரு பகுதியாகும் என கூறப்பட்டுள்ளது.

Related Posts