இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த நாகை மாவட்டத்தை சேர்ந்த 19 மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களின் 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடற்படையினரின் உதவியுடன் கரையோர பாதுகாப்பு திணக்களப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் இந்திக தி சில்வா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று காங்கேசந்துறை மீனவர் விசாரணை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் இந்திக தி சில்வா மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை மத்திய மாநில அரசுகள் மீட்க வேண்டும் என்று மீனவ மக்கள் கோரியுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.