தொடருந்துடன் ஆபத்தான வகையில் செல்பி புகைப்படம் எடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது என்று ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
ரயில்வே கட்டளை சட்டத்துக்கமைய பயணிக்கும் ரயில் பயணி அல்லது ஏனைய நபர்கள் இவ்வாறு ஆபத்தான செல்பி புகைப்படங்கள் எடுக்க கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு புகைப்படங்கள் எடுப்பவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த அவர், தொடருந்துத் தடத்தில் பயணிப்பதே தண்டனை வழக்கப்பட வேண்டிய குற்றச் செயல் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடருந்துத் தடங்களில் செல்பி புகைப்படம் எடுத்த ஐந்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன