தேவையென்றால் 2ம், 3ம் விருப்பு வாக்கினையும் அளிக்க முடியும்!- மஹிந்த தேசப்பிரிய

எதிர்வரும் ஜனாதிபதி தோதலின் போது தேவையென்றால் இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்கினையும் அளிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்குச் சீட்டில் தாம் வாக்களிக்கும் வேட்பாளரின் சின்னத்திற்கு எதிரில் 1 என்ற இலக்கத்தை எழுதுவதன் மூலம் முதலாம் விருப்பத் தெரிவினை செய்ய முடியும்.

மேலும் இரண்டு வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கினை அளிக்க வேண்டுமாயின் குறித்த வேட்பாளர்களின் சின்னங்களுக்கு எதிரில் 2 மற்றும் 3 என குறிப்பிட முடியும்.

இரண்டாம் மூன்றாம் விருப்பத் தெரிவுகளை அடையாளப்படுத்தாது ஒரே ஒரு வேட்பாளருக்கு மட்டும் தேவையென்றால் வாக்களிக்க முடியும்.

வாக்காளர் ஒருவர் ஒரே வேட்பாளருக்கு மட்டும் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த வேட்பாளரின் சின்னத்தின் எதிரில் 2 அல்லது 3 என குறிப்பிடாது வேறும் எந்தவொரு அடையாளத்தை இட்டாலும் வாக்களிப்பு செல்லுபடியாகும்.

தாம் விரும்பும் வேட்பாளரின் சின்னத்தின் எதிரில் 1 அல்லது ரு என குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதாகும்.1 அல்லது ரு என குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதாகும்.

வாக்காளர் ஒருவர் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காது இருந்தாலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு 1 அல்லது ரு அடையாளம் இட்டாலோ வாக்கு நிராகரிக்கப்படும்.

இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்கு மட்டும் அளிக்கப்பட்டிருந்தாலோ அல்லது வாக்காளரை அடையாளப்படுத்தக் கூடிய வகையில் எழுதுதல் அல்லது வேறும் வகையில் எதாவது வாக்குச்சீட்டில் வரையப்பட்டிருந்தால் அவ்வாறான வாக்குகள் நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வாக்களிப்பு தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

Related Posts