தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்க அதிகாலையிலேயே வாக்களியுங்கள்

நாளை நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற தேர்­தலில் அனைத்து வாக்­கா­ளர்­களும் கட்­டா­ய­மாக தமது வாக்­கு­ரி­மையை பயன்­ப­டுத்த வேண்­டு­மென வலி­யு­றுத்தும் ‘கபே’ அமைப்பு தேவை­யற்ற அசம்­பா­வி­தங்­களைத் தவிர்த்துக் கொள்­வ­தற்கு அதி­கா­லை­யி­லேயே வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்குச் சென்று வாக்­க­ளிக்­கு­மாறு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

வாக்­கா­ளர்கள் தாம் விரும்பும் கட்­சிக்கு வாக்­க­ளிக்கும் அதே­வேளை அக்­கட்­சியின் ஊடாகப் போட்­டி­யிடும் ஊழ­லற்ற சிறந்த வேட்­பா­ளர்­க­ளுக்கு தமது விருப்பு வாக்­கு­களை வழங்­கு­மாறு கபே அமைப்பின் நிறை­வேற்று ப­ணிப்­பாளர் கீர்த்தி தென்­னகோன் தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கடந்த தேர்­தல்­க­ளோடு ஒப்­பி­டு­கையில், இம்­முறை சுயா­தீ­ன­மா­னதும் அமை­தி­யா­ன­து­மான தேர்­த­லொன்­றிற்­கான சூழல் காணப்­ப­டு­கின்­றது. தேர்­தல்கள் திணைக்­களம் மற்றும் பொலிஸ் திணைக்­களம் போன்­றன தமது செயற்­பா­டு­களை எவ்­வித தடையும் இன்றி முன்­னெ­டுப்­பதை காண­மு­டி­கி­றது.

தேர்தல் சட்­டங்­களை பாது­காக்கும் பொருட்டு மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­களின் போது, கட்சி பேதங்­க­ளின்றி செயற்­ப­டு­வ­தையும் காண­மு­டி­கி­றது. கடந்த காலங்­களில் இவ்­வா­றான நிலை­மை­களை காண­மு­டி­யா­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஒவ்­வொரு வாக்­கா­ளர்­களும் கட்­டா­ய­மாக வாக்­க­ளிக்க வேண்டும். அவ்­வாறு வாக்­க­ளிக்­காத பட்­சத்தில் நீங்கள் விரும்­பாத தகு­தி­யற்ற நபர்கள் பாரா­ளு­மன்­றத்­துக்கு பிர­வே­சிப்­ப­தற்கு அது வாய்ப்­பாக அமைந்­து­விடும். எனவே, கட்­டா­ய­மாக அனை­வரும் வாக்­க­ளிக்க வேண்­டு­மென அவர் மேலும் வலி­யு­றுத்­தினார்.

தேர்­த­லுக்­கான பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள போதிலும் சமூக வலைத்தளங்கள் ஊடான பிரசார நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, அவற்றையும் நிறுத்துமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts