வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவின் போது 16 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்திருவிழா சனிக்கிழமை(26) இடம்பெற்றது. இதன்போது பெண்கள் அணிந்திருந்த 7 பவுண், 5 பவுண் தாலிக் கொடிகள் மற்றும் இரண்டு சிறுமிகள் அணிந்திருந்த இரண்டு பவுன் சங்கிலிகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுத்தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, சுன்னாகம் கந்தரோடை கற்பொக்கனை பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற பெண்ணொருவரின் சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியும் அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.