தேர்தல் விதிமீறல் தொடர்பில், யாழ்ப்பாணத்தில் இதுவரை 17 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக யாழ்.மாவட்ட செயலக தேர்தல்கள் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் இரண்டு தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக தனியாருக்குச் சொந்தமான இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியமை, பதாதைகளை வைத்தமை தொடர்பாகவே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, மோதல் சம்பவம் தொடர்பிலும் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மேலும், வேலைவாய்ப்பு வழங்குவதாக சில கட்சிகள் வாக்குறுதி வழங்கியமை தொடர்பாகவும் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, வீதிகளில் பொறிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளது சின்னங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் யாழ்.மாவட்ட செயலக தேர்தல்கள் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.