இலங்கைத் தேர்தல் வரலாற்றில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அவருக்கு 5 இலட்சத்து 56 ஆயிரத்து 600 வாக்குகள் கிடைத்துள்ளன. இதேவேளை அதிக விருப்பு வாக்குகளைப் பெறவேண்டும் என்ற நோக்கில் அதிக வாக்காளர்கள் கொண்ட மாவட்டங்களில் ஒன்றான குருநாகலில் களமிறங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 4 இலட்சத்து 23 ஆயிரத்து 529 வாக்குகள் கிடைத்துள்ளன.
இதேவேளை இரண்டு ஆசனங்களைக் குறிவைத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து களமிறங்கிய மனோகணேசனின் கட்சிக்கு ஒரு ஆசனமே கிடைத்தது. அக்கட்சியின் சார்பில் 69 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்று மனோகணேசன் தெரிவானார்.