தேர்தல் வன்முறைகள்: 19 வேட்பாளர்கள் கைது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டதிட்டங்களை மீறியமை மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட நபர்களுள் 19 வேட்பாளர்களும் அடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 57 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 120 பேரில் 10 வேட்பாளர்கள் அடங்குகின்றனர்.

அத்துடன் தேர்தல் தொடர்பாக 129 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதுடன் அவை தொடர்பில் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 9 வேட்பாளர்கள் அடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts