தேர்தல் பிரசாரங்கள் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு!

mahinda-deshpriyaமூன்று மாகாண சபை தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் 18 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெறும் என்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தேர்தல்கள் சட்டத்திட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தனார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் தேர்தல் தொடர்பில் எவ்விதமான செய்திகளையும் வெளியிடக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களினால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு பிரசாரங்களையும் முன்னெடுக்க கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன்பிரகாரம் தேர்தல் பிரசாரங்கள், அரசியல் விளம்பரங்கள் மற்றும் அறிக்கைகள் புதன்கிழமை நள்ளிரவு 12 மணி பின்னர் பிரசுரிப்பதற்கும்- ஒலி- ஒளி பரப்புவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related Posts