தேர்தல் பரப்புரைக்கு சிறைக் கைதிகளை பயன்படுத்தும் ஆளும் கட்சி – கபே

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தனது தேர்தல் பரப்புரைக்காக சிறைக் கைதிகளை பயன்படுத்தப்படுவதாக கபே அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீல நிற சட்டை மற்றும் அரைக்காற்சட்டை அணிந்து சிறை கைதிகள் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கபே விடுத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

prinson-1

prinson-2

மாத்தறை கம்புறுபிட்டியவில் நேற்றுக் காலை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை மேடை அமைப்பு பணியில் 44 கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை புகைப்பட ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறைச்சாலை திணைக்களத்தின் சொத்துக்கள் பல தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தப்படுவதாகவும் கபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts