தேர்தல் தொடர்பாக இன்று முதல் முறைப்பாட்டு செய்ய முடியும்

elections-secretariatவடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களை முன்னிட்டு தேர்தல் முறைப்பாட்டு இணைப்பு நிலையம் இன்று தேர்தல்கள் செயலகத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.

தேர்தல்கள் திணைக்களம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. தேர்தல்கள் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற உயரதிகாரி தலைமையில் முறைப்பாட்டு நிலையம் ஆரம்பிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையத்தில் பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அங்கம் வகிப்பரென அவர் கூறினார்.

போட்டியிடும் அரசியல் கட்சிகள் விரும்பினால் தமது பிரநிதிகளை தேர்தல் முறைப்பாட்டு நிலையத்திற்கு நியமிக்க முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுவோர் தொடர்பில் மக்கள் தொலைபேசி மற்றும் தொலை நகலுக்கூடாக தமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

இதேவேளை, எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டங்கள் தோறும் தேர்தல் முறைப்பாட்டு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.

வன்முறைகளைப் பொறுத்து தேவையேற்படின் பிரதேச செயலகங்களுக்கு முறைப்பாட்டு நிலையங்களை விஸ்தரிப்பது தொடர்பில் பின்னர் ஆராயப்படுமெனவும் அவர் கூறினார்.

Related Posts