தேர்தல் காலத்தில் தேர்தல் தினத்தில் அடையாள அட்டைகோரி செயலகத்தை நாடுகின்றவர்கள் இன்றும் உள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்
வாக்காளர் தினத்தினை முன்னிட்டு யாழ்.முற்றவெளியில் இருந்து மாவட்டச் செயலகம் வரையில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனியினைத் மொடர்ந்து மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தலமையுரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில் ,
வாக்காளர்களாக பதிவு செய்வது தனிய அரசியலிற்காக மட்டும் அல்ல. அந்த வாக்காளர் எண்ணிக்கையே மாவட்ட வாழ் மக்களிற்கான அனைத்து பங்களிப்பாகவும் கானப்படுகின்றது. என்பதனை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு செயல்பாடு அமையவேண்டும். அதேநேரம் இந்த வாக்காளர் பதிவினை பல கிராம சேவகர்கள் திறம்படச் செய்யும் நிலையில் ஒரு சில கிராம சேவகர்கள்தொடர்பில் முறைப்பாடும் செய்யப்படுகின்றன.
எனவே இது தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்தி அணைவரையும் தவறாது பதிவினை மேற்கொள்ள ஊக்கமளிக்க வேண்டும். என்றார்.
இதேநேரம் சட்டம் விசாரணைக்கான மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் உரைநாற்றுகையில் ,
2012ல் இருந்து இந்த வாக்காளர் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இம் முறை பிரதான நிகழ்வு கேகாலை ரம்புக்கனையில் இடம்பெற்றதோடு ஆரம்பமானது. தொடர்ந்து மொனராகலை இன்று யாழ்ப்பாணத்திலும் இடம்பெறுகின்றது. இலங்கை தளர்தல் வரலாற்றில் 1965ல் காலி , கண்டி , கொழும்பு மாநகர சபைத் தேர்தலுடனேயே வாக்குறுமை ஆரம்பித்தது. 1910ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குரு மக்களம் சீர் திருத்தமே கொண்டுவரப்பட நிலையிலே கொண்டு வரக்பட்டது அப்போது 4 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இருப்பினும் 3 தொகுதி இலங்கையர் இல்லாதவர்களிற்கே வழங்கப்பட்டது.
அந்த தொகுதியில் 21 வயதிற்கு மேற்பட்ட உயர் கல்வி , உயர் பதவி கொண்ட ஆண்கள் மட்டுமே தகுதி பெற்றிருந்தனர்.
இதன் பிரகாரம் முதலாவது சட்டவாக்கல் தேர்தல் 1913ல் இடம்பெற்றது. அதில் 2 ஆயிரத்து 211 வாக்காளர்கள் மட்டுமே இருந்தனர். அப்போது இருவர் போட்டியிட்டனர. சேர்.பொன் இராமநாதனும் தெற்கைச் சேர்ந்த ஒருவரும் போட்டியிட்டியிட்ட நிலையில் சேர்பொன் இராமநாதனே வெற்றியீட்டினார். 1913 வாக்குகளை அவர் பெற்றார். இவரே முதலாவது பிரதிநிதியாவார்.
அதன் பின்னர் 1920ல் மலின் சீர் திருத்தம் மூலம் 16 பிரதிநிதிகளும் 1924ல் டெவன் செயார் சீர் திருத்தம் மூலம் 29 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்பு 1931ல் டொனமூர் திருத்தச் சட்டம் மூலம் சர்வஜன வாக்குரிமை 21 வயதிற்கு மேற்பட்ட அணைத்து ஆண் , பெண்களிற்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது . இதன் மூலம் ஆசியாவிலேயே முதலாவது சர்வஜன வாப்புரிமையளித்த நாடாக இலங்கை விழங்கியது.
அதன் பிரகாரம் 1947ல் இரண்டு தேர்தல் செயலகம் பின்னர் 1956ல் ஒரே தேர்தல் செயலகமாக மாற்றப்பட்டது . இதன் முதலாவது ஆணையாளர். அருள்பிரகாசம் என்னும் தமிழரே பதவி வகித்தார். இதன் பின்பு 2015-11-13ல் இருந்து ஆணைக்குழுவாக மாற்றப்பட்டது. இதேநேரம் 21 வயதிற்கு மேற்பட்டோருக்கான வாக்குரிமை கானப்பட்ட நிலையில் 1951ம் ஆண்டு 11ம் இலக்க சட்டத்தின் மூலம் 18வயதிற்கு மேற்பட்ட அணைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. என்றார்.