தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்ட இருவருக்கு தலா நூறு ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோப்பாய் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் இருவர் கடந்த 20ஆம் திகதி இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரையும் கடந்த 21 ஆம் திகதி பிணையில் விடுவித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, வழக்கு விசாரணையை நேற்று (01) வரை ஒத்திவைத்தது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன் போது சந்தேகநபர்கள் இருவரும் குற்றத்தை மன்றில் ஒப்புக்கொண்டனர்.

அதன் பின்னர் தேர்தல்கள் சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் இருவருக்கும் தலா 100 ரூபா தண்டம் விதித்து நீதிமன்று உத்தரவிட்டது.

Related Posts