எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்கள் சட்டத்தை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், பொதுமக்களுக்கு தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது குறித்த முறைப்பாடுகளை தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் அறிவிக்க முடியும் என, பொலிஸ் தலைமையகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வேட்புமனு வழங்கிய தினத்தில் இருந்து தேர்தல் நிறைவடையும் வரை பேரணி, வாகனப் பேரணி, ஊர்வலங்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று வாக்கு கேட்பது உள்ளிட்டவை சட்டவிரோதமானதாகும்.
அதேபோல் பொது இடங்களில் பதாகைகள், சுவரொட்டிகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதும் சட்டவிரோதமானது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்த முறைப்பாடுகளை 119 எனும் அவசர இலக்கத்திற்கு அல்லது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் 011 23 95 605 , 011 238 40 24 ,011 25 43 811 மற்றும் பொலிஸ் விசேட தேர்தல்கள் பிரிவின் 011 23 87 999 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கோ தொடர்பு கொண்டு அறிவிக்கலாம்.
அல்லது இவ்வாறான தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான வீடியோ ஆதாரங்கள் இருப்பின் அதனை policemedia.media@gmail.com அல்லது telligp@police.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என பொலிஸ் தலைமையும் குறிப்பிட்டுள்ளது.