தேர்தல் கடமையிலீடுபட்ட வாகனம் விபத்து : மூவர் படுகாயம்

முல்லைத்தீவில் தேர்தல்கடமையில் ஈடுபட்ட மாவட்ட செயலக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று அதிகாலை முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் நந்திக்கடலுக்கு அண்மையாக மூன்றாம்கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர் மற்றும் இரண்டு பொலிஸார் படுகாயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts