தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அடுத்த வாரம் வடக்கிற்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொள்வதற்கே அவர் எதிர்வரும் 21 ஆம் திகதி விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களையும் சந்தித்து அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவர் கேட்டறிந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.