தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கையை நிராகரித்து பணிப்புறக்கணிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் மற்றும் ரயில்வே இயந்திர பொறியியலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிமுதல் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதோடு, காலை 9 மணிமுதல் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

ரயில்வே இயந்திர பொறியியலாளர்கள் ஏற்கனவே கடந்த 8 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், குறித்த வேலைநிறுத்த போராட்டமும் தொடர்கின்றது. இதனால், பல ரயில்வே சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பெப்ரவரி 15ஆம் திகதி வரை வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு கோரக்கை விடுத்திருந்தது. எனினும், ஆணைக்குழுவின் கோரிக்கையை நிராகரித்து குறித்த வேலைநிறுத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts