தேர்தலுக்கு முன்னர் வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும்

thellipplai_poraddam_02வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்பாக வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும்’ என்று வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றகுழு கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று செவ்வாய்கிழமை யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் சண்முகலிங்கம் சஜீவன், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தங்கள் சொந்த நிலங்களை விட்டு வெளியேறிய வலிவடக்கு பிரதேச மக்களின் 1 இலட்சத்து 12 ஆயிரம் பரப்பு காணி இராணுவத்தால் அபகரிப்புச் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வலிகாமம் வடக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்யப்போகிறோம் சொந்த இடத்திற்குச் செல்லவிடப்போகின்றோம் என்று சில அரசியல்வாதிகள் தெரிவித்து வருகின்றனர்.

தேர்தலுக்கு முன்னர் வலிகாமம் வடக்கில் சில பகுதிகள் விடுவிக்கப்படலாம் இருந்தாலும் இந்த தேர்தலுக்கு முன்னர் வலிகாமம் பகுதி முழுவதிலும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை ஆளும்பட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அரசியல் தேவைக்கு பயன்டுத்தி வருகின்றனர்.

மேதினம், ஜனாதிபதியின் வருகை, போன்ற பல்வேறு தேவைக்கு மக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றார்கள் அத்தகைய நடவடிக்கை நாங்கள் இனிவரும் காலத்தில் அனுமதிக்க முடியாது இதனை இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தொடர்போராட்டங்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டபோதும் தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினால் அதனை முன்னெடுக்க முடியாதுள்ளது. இந்த போராட்டத்ததை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கவிட்டாலும் மீள்குடியேற்றக் குழு தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Related Posts