தேர்தலுக்கு முன்னர் படைகளை அகற்றுங்கள் – கபே

vote-box1[1] (1)வடக்கில் நீதியான முறையில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவேண்டுமெனில், அங்கு பாதுகாப்புக் கடமையிலிருந்து இராணுவத்தினரை உடன் அகற்றுமாறு நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (“கபே’) அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த இயக்கத்தின் தேசிய அமைப்பாளர்களில் ஒருவரான அஹமட் மனாப் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கில் 2012ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை படையினர் கோரி வருகின்றனர். கிராம அலுவலர்களிடம் செல்லும் படையினர் வாக்காளர் பட்டியலை வழங்குமாறு கோரி மிரட்டுகின்றனர் எனக் கூறப்படுகிறது. இது குறித்து எம்மிடம் பலர் முறையிட்டுள்ளனர்.

வடக்கில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் அங்குள்ள படைகள் அகற்றப்பட வேண்டும். சிவில் நடவடிக்கைகள் அனைத்தும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதன் மூலமே நீதியான தேர்தலை அங்கு நடத்த முடியும் என்றார்.

Related Posts