தேர்தலுக்காக பாடசாலைகள் மூடப்படும் – கல்வியமைச்சு

closedதேர்தல்கள் இடம் பெறவுள்ள வடமேல், மத்திய மற்றும் வடக்கு ஆகிய மாகாண சபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி மூடப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி இடம் பெறவுள்ள மாகாண சபை தேர்தல்களை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல்கள் செயலகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts