தேர்தலில் தோற்றிருந்தால் என்னைக் கொன்றிருப்பார்கள்! – மைத்திரிபால சிறிசேன

“தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெளியேறினேன்” – இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

my3-maiththerepala-seresena

பொலநறுவையில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்ட ஜனாதிபதி, தேர்தலில் தோற்றிருந்தால் தான் ஆறடி நிலத்திற்குள் புதையுண்டிருப்பார் என்றும் கூறினார்.

அக்கூட்டத்தில் மேலும் அவர் தெரிவித்த விடயங்கள் வருமாறு:

“தேர்தலில் நான் தோற்றால் என்னை சித்திரவதை செய்வதற்கும் எனது பிள்ளைகளை கைது செய்வதற்கும் மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் திட்டமிட்டது.

தேர்தலுக்குப் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை ஏற்பதைத் தவிர எனக்கு வேறு வழியிருக்கவில்லை.

தலைமையை ஏற்றிருக்காவிட்டால் நாடு உடனடியாக தேர்தலை சந்தித்திருக்கும். தேர்தல் நடைபெற்றிருந்தால் 100 நாள் திட்டம் பாதிக்கப்பட்டிருக்கும்” என்றும் அவர் கூறினார்.

Related Posts