தேர்தலில் சுமார் 80 சதவித வாக்குப்பதிவு இடம்பெறும் – மஹிந்த நம்பிக்கை

2020 பொதுத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலில் சுமார் 80 சதவித வாக்குப்பதிவு இடம்பெறும் என்று தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சுகாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்த தேர்தலில் வாக்காளர்கள் அனைவரினதும் பாதுகாப்புக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய கூறினார்

Related Posts