தேர்தலில் எமக்கு ஆணை வழங்கினால் பலாலியில் குடியேற்றம்: டக்ளஸ்

daklasவடக்கு மாகாணசபைத் தேர்தலை மக்கள் சரியாகப் பயன்பத்தி எமக்கு ஆணை வழங்கினால் மூன்று தொடக்கம் 5 ஆண்டுகளில் வடமாகாணத்தை வளமிக்க செல்வமிக்க மாகாணமாக மாற்றிக் காட்டுவோம் என்பதுடன உயர் பாதுகாப்பு வலயமான பலாலி பிரதேசத்தில் மக்களை சென்று குடியேற்றமுடியும்’ என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

‘நாய் குரைத்தாலும் வண்டிபோகவேண்டிய இடத்தைப் போய் சேரும்’என்ற பழமொழிக்கு இணங்க அரசாங்கத்திற்கு எதிராக பல விமர்சனங்கள், எதிர்ப்புக்கள் வந்தாலும் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேவையானவற்றைச் செய்யும்’ என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சமூர்த்தி உத்தியோகஸ்தர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘பொதுமக்கள் துன்பத்துடன் இருக்கவேண்டும் என்பதே கூட்டமைப்பின் நோக்கமும் சிந்தனையுமாக இருக்கின்றது.

இந்த அரசாங்கத்துடன் எமது பிரச்சனையை பேசித் தீர்வுகாணமுடியும் என்று நான் நம்புகின்றேன்.

யுத்தத்தினால் எமது மக்கள் பல பாதிப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்திருக்கின்றார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்து மக்களிற்கு சமாதானத்தை ஏற்படுத்தியிருக்கின்றார்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட திவிநெகும திட்டத்தினை கூட்டமைப்பினர் எதிர்த்தார்கள். இந்த திட்டத்தின் மூலம் 1 இலட்சம் பேர் நன்மை அடைந்திருக்கின்றார்கள்.

தமிழ் மக்கள் துன்பத்தில் இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடனும் சிந்தனையுடனும் கூட்டமைப்புச் செயற்பட்டு வருகின்றது. ‘நாய் குரைத்தாலும் வண்டி போகவேண்டிய இடத்தைப் போய் சேரும்’என்ற பழமொழிக்கு இணங்க அரசாங்கத்திற்கு எதிராக பல விமர்சனங்கள், எதிர்ப்புக்கள் வந்தாலும் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேவையானவற்றைச் செய்யும். இது நான் அரசாங்கத்துடன இணைந்திருப்பதால் சொல்லவில்லை.

வடக்கு மாகாணசபைத் தேர்தலை மக்கள் சரியாகப் பயன்பத்தி எமக்கு ஆணை வழங்கினால் மூன்று தொடக்கம் 5 ஆண்டுகளில் வடமாகாணத்தை வளமிக்க செல்வமிக்க மாகாணமாக மாற்றிக் காட்டுவோம் என்பதுடன உயர் பாதுகாப்பு வலயமான பலாலி பிரதேசத்தில் மக்களை சென்று குடியேற்ற முடியும்.

அரசியல் ரீதியாக எங்களைப் பலப்படுத்தி பாதுகாத்து அதனூடாக உங்களையும் பாதுகாப்பதன் ஊடாக எதிர்காலத்தை நோக்கி பயணிக்க முடியும்’ என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

Related Posts