தேர்தலில் ஈ.பி.டி.பி அமோக வெற்றி பெறும்: டக்ளஸ் தேவானந்தா

மக்கள் மாற்றத்தினையே விரும்புகின்றார்கள் எனவே நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெறும், என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கடந்த காலங்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால், தற்போது மக்கள் மத்தியில் செல்லும் போது, மக்களின் ஆணைகளைப் பார்த்தால், எதிர்காலத்தில் ஈ.பி.டி.பிக்கு ஆணை கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை இருக்கின்றது.

தமது பிரச்சினைகளைக் கூட மக்களின் நலன் சார்ந்ததாக யோசிக்காமல் சில அரசியல்வாதி இருக்கின்றார்கள். இவர்களின் அடிப்படையான பிரச்சினைகள் கூட மக்களின் நலன்சார்ந்ததாக இருக்கவில்லை. முகமூடிக் கொள்ளைக்காரர் போன்று ஒரு பகுதியினர் தமக்கு வாக்களிக்க வேண்டுமென்று கேட்கின்றார்கள்.

மற்றைய முகமூடிக்கொள்ளையர்கள் இல்லை இல்லை அவ்வாறு வாக்களிக்க வேண்டாம் என எமக்கே வாக்களியுங்கள் என சொல்கின்றார்கள்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் 40 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுகின்றார்கள். பெண்களுக்கு 40 வீதத்திற்கு அதிகமாக கொடுத்திருக்கின்றோம்.

ஆனால், 50 வீதமானவை கொடுக்க வேண்டும். அதுவே கட்சியின் நிலைப்பாடு, அந்த நிலைப்பாட்டினை அடுத்த முறை கவனத்தில் எடுத்து பெண்களுக்கான பங்களிப்பினை 50 வீதமாக உயர்த்துவோம்” என டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts