தேர்தலின் மூலம் தென்பகுதி அரசியலில் மாற்றங்கள் ஏற்படும்: சுரேஸ்

நடைபெறவுள்ள தேர்தலின் மூலம் தென்பகுதி அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, கிடாய்ச்சூரியில் நடைபெற்ற தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘வடக்குக் கிழக்கினைப் பொறுத்தவரையில் தமிழ்பேசும் மக்களாகிய நாம் ஒரு திருப்பு முனையில் இருக்கின்றோம். இத்தேர்தலின் மூலம் அரசியல் ரீதியாக என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன என்பதை இத்தேர்தல் நிச்சயமாக நிர்ணயிக்கப் போகின்றது.

தென்பகுதியைப் பொறுத்தவரையில், மைத்ரிபால சிரிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் தமது பலத்தினை நிரூபிப்பதற்கான நிர்ப்பந்தத்தில் இருக்கின்றனர். ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அரசாங்கத்தின் எதிர்காலம் இத்தேர்தல் வெற்றிகளின் முடிவுகளில் தங்கியுள்ளதான தோற்றப்பாடு தென்பகுதியில் நிலவுகின்றது.

இந்நிலையில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் நாம் எமது பலத்தினை நிரூபிப்பதற்கான தேவை இன்று எழுந்துள்ளது’ என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts