மொனறாகலையில் கடத்தப்பட்ட இளம் பௌத்த தேரர் யாழில் மீட்பு

மொனறாகலையில் கடத்தப்பட்ட இளம் பௌத்த தேரர் ஒருவர், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அருகில் வீசியெறிப்பட்டுள்ளார்.

17 வயது நிரம்பிய குறித்த பிக்கு, நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ். மக்களால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த தேரர் நேற்று முன்தினம் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுவதோடு, காரணம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

தேரர் ஆடைகள் எதுவுமின்றி கைவிடப்பட்டிருந்த நிலையில், மக்கள் அவருக்கு தேவையான ஆடைகளையும் வழங்கி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts