தேநீர் அருந்துவதைக் குறைக்குமாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசாவிற்கு முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் அறிவுரை வழங்கியுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் அமர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில் ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு தடை போடப்பட்டமை தொடர்பில் கடந்த அமர்வில் எதிர்க்கட்சித்தலைவர் கொண்டுவந்த கவனயீர்ப்புப் பிரேரணைக்கு சுகாதார அமைச்சரால் முழுமையான விளக்கம் வழங்கப்பட்டது.
இதன்போது யாழ். மாவட்டத்தில் உள்ள தேநீர் கடைகள் சுகாதாரம் சரியான முறையில் பேணுவதில்லை எனவும் அவர்களுக்கு நடவடிக்கை எடுக்காதவர்கள் எதற்காக ஐஸ்கிறீம் உற்பத்தியாளர் மற்றும் வியாபார நிலையங்களுக்கு எதிராக எடுக்கப்பட்டது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தான் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து தேநீர் கடைகளிலும் தேநீர் குடித்ததாக தெரிவித்தார். அதன்போதே “தேநீர் அருந்துவதைக் குறையுங்கள்” என்று எதிர்க்கட்சி தலைவரிடம் முதலமைச்சர் தெரிவித்தார்.