தற்பொழுது நாட்டில் நிலவும் அதிக வெப்பம் கொண்ட காலநிலைமைக்கு ஈடுகொடுப்பதற்கு ஒவ்வொருவரும் அதிகளவில் நீர் பருகுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் சமிந்தி சமரகோன் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிக உஷ்ணத்தின் காரணமாக உடம்பின் செயற்பாடுகள் பாரிய தாக்கத்துக்கு உள்ளாகின்றன. இதனால், சளியுடன் கூடிய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.
சூடான காலநிலை காணப்படும் வேளைகளில் வெளிப்பயணங்களில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பும் ஒருவர் தனது முகத்தை கழுவிக் கொள்ளுமாறும், இக்காலப் பகுதியில் வேகமாக பரவும் இன்புளுவென்சா, காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்தும் டெங்கு காய்ச்சலிலிருந்தும் பாதுகாப்புப் பெறுமாறும் டாக்டர் சமிந்தி பொதுமக்களிடம் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறிப்பாக மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் அதிக நேரத்தை கழிப்பதைத் தவிர்ந்து கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்