தேசிய வீடமைப்பு அதிகாரசபை மூலம் வீடுகள் நிர்மாணிக்க நடவடிக்கை!

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் இந்தாண்டு யாழ் மாவட்டத்தில் 25 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு அமைச்சராக அமரர் பிரேமதாச இருந்த காலத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்னாலைக் கிராமத்தில் 65 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தன.

இந்த வீடுகள் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அழிந்து போயுள்ள நிலையில் இப்பகுியில் தற்போது மீண்டும் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

Related Posts