தேசிய விளையாட்டு விழாவிற்காக வடமாகாண அணி கொழும்பு பயணம்

38ஆவது தேசிய மெய்வல்லுனர் விளையாட்டு விழா எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பித்து மூன்று தினங்களாக கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

மேற்படி போட்டிகளில் பங்குபற்றுவதற்காக வடமாகாணத்தில் இருந்து 40வீரர்களும், 40 வீராங்கனைகளும் இன்று கொழும்பு பயணமாகவுள்ளனர்.

வடமாகாண மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் முதலாம் இரண்டாம் இடங்களைப்பெற்ற வீரர்களே மேற்படி போட்டிக்கு வடமாகாணம் சார்பாகச் செல்கின்றனர்.

Related Posts