தேசிய ரீதியில் வடக்கு கிழக்கு மாணவர்கள் இருவர் முதலிடத்தில்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவனான தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்

அதேபோன்று , விஞ்ஞானப் பிரிவில், மட்டக்களப்பு, பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மகிழுரைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் முதலிடம் பெற்றுள்ளார்

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக சுகாதார வழிகாட்டல்களுக்கமைய 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்றது.

இதில் 2 ஆயிரத்து 648 பரீட்சை மத்திய நிலையங்களில் மூன்று இலட்சத்து 62 ஆயிரத்து 824 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனா்.

இதேவேளை உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி கனகேஸ்வரன் கவினா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.உயிரியல் விஞ்ஞான பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்ற அவர் 2.8677 இசட் புள்ளிகளைப் பெற்று தேசிய மட்டத்தில் 17ம் இடத்தினைப் பெற்றுள்ளார். இவர் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரனின் இரண்டாவது புதல்வி அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts