தேசிய ரீதியிலான காற்பந்து யாழில் ஆரம்பம்

பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி நேற்று முன்தினம் முதற்தடவையாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது.

foot-ball

கல்வி அமைச்சுடன் இணைந்து இப்போட்டிகளின் ஒழுங்குகளை மாகாண கல்வி அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் இசுறுபாய ஆகியன மேற்கொண்டுள்ளன.

15 வயது பிரிவு,17 வயது பிரிவு மற்றும் 19 வயதுப் பிரிவு ஆண், பெண் ஆகிய நான்கு குழுக்களாக இடம்பெறும் இப்போட்டிகள் யாழ் மாவட்டத்தின் ஆறு மைதானங் களில் இடம்பெற்று வருகின்றது.

யாழ் மத்திய கல்லுரி மைதா னத்தில் இதன் முதற்போட்டியை வடமாகாண கல்வி பணிப்பாளர் எஸ்.உதயகுமார் ஆரம்பித்து வைத்தார்.

மொத்தமாக 108 அணிகள் இப் போட்டிகளில் மோதுகின்றன. தொடர்ந்து மூன்று நாட்கள் நடை பெற்ற இப்போட்டிகள் இன்று 21ஆம் திகதி திங்கட்கிழமை யாழ் மத்திய கல்லூரி மைதானத்திலும் சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத் திலும் இடம்பெறவுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சு அறி வித்துள்ளது.

Related Posts