தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெற்ற மாணவர்களுக்கு வரவேற்பு

JSKANDA VARODAYA COLLEGEகல்வி அமைச்சினால் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட தமிழ் தின போட்டியில் நாடக பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றிபெற்ற சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

கொழும்பில் இருந்து திரும்பிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுன்னாகம் நாகம்ஸ் தியேட்டர் முன்றலில் இருந்து கல்லூரியின் மேழைத்தேய பாண்ட் வாத்தியக் குழவினரின் அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

இவ் வரவேற்பு ஊர்வலமானது, காங்கேசன்துறை வீதி, டொக்டர் சுப்ரமணியம் வீதி வழியாக சென்று பாடசாலையை அடைந்தது.

இதனைத் தொடர்ந்து பாரட்டு நிகழ்வு இடம்பெற்றது.

Related Posts