2016ஆம் ஆண்டில் தேசிய பாடசாலை இடமாற்றத்திற்கான விண்ணப்பங்களை கோர கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்விடமாற்றம் விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனைகள் அனைத்து தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இடமாற்றம் தொடர்பில் குறித்த விண்ணப்பங்களில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு விண்ணப்பங்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் வகையில் தேசிய பாடசாலைகள் பணிப்பாளர், ஆசிரியர் இடமாற்றப் பிரிவு, இசுருபாய, பத்தரமுல்ல என்ன முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் செயலாளர் கோரியுள்ளார்.
இடமாற்றம் தொடர்பில் ஆராய்வதற்கான ஆசிரியர் சபை கூட்டம் நடத்தப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய 2015 டிசம்பர் மாதம் இடமாற்றம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதுதொடர்பான மேலதிகமான விடயங்களை 011 2784434என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டுபெற்றுக்கொள்ளலாம்.