தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தினூடாக சுமார் ஒரு மில்லியன் வரையான வீட்டு சுற்றுச்சூழலை சோதனைக்கு உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொலிஸார், இராணுவத்தினர், சமூக சேவை அமைப்புகள் மற்றும் சுகாதார ஊழியர்களும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்களை அடையாளங் கண்டு அவற்றினை அழிப்பதுடன் , நுளம்பு தொற்று தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாடலாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த நடவடிக்கைகயினை கண்காணிப்பதற்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய நிபுணர் பபா பலிஹவடன சுட்டிக்காட்டியுள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் பத்தாயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுதாகவும்,டெங்கு காய்ச்சளால் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts