தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

இம்மாதம் 27ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும்.

நுளம்புகள் உருவாகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.

நுளம்பு ஒழிப்பு வாரத்தில் வீடுகள், நிறுவனங்கள் என்பனவற்றின் சுற்றுச் சூழல்கள் பரிசோதிக்கப்படவிருக்கின்றன. நான்காயிரத்து 500 பேரை உள்ளடக்கிய குழுக்கள் இந்தப்பணியில் ஈடுபடும்.

Related Posts