தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்கும் மக்களை பதிவு செய்யுமாறு அறிவித்தல்

பலாலி கன்னார் வயல் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் தின விழாவில் பங்கேற்கவுள்ள மக்களை முன் பதிவு செய்து கொள்ளுமாறு பலாலி ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோவிலும் இந்துக் கோயில்கள் மற்றும் மீள்குடியேற்ற சபையும் அறிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டுக்கான தேசிய தைப்பொங்கல் விழா பலாலி கன்னார் வயல் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரம சிங்க, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையிலேயே குறித்த ஆலயத்தில் நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் பங்கேற்கவுள்ள மக்களை 0774 171 780, 0775 701 390, 0777 552 947, 0779 683 981 மற்றும் 0778 435 608 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி பதிவுகளை மேற்கொள்ளுமாறு அந்த சபை அறிவித்துள்ளது.

Related Posts