தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்! காய்ச்சல் தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தல்!!!

செப்­டெம்பர் 20 முதல் 26 வரை­யான ஒரு­வார காலம் தேசிய டெங்கு ஒழிப்பு வார­மாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதன்­போது, டெங்கு ஒழிப்பு துப்­பு­ரவுப் பணிகள் நாட­ளா­விய ரீதியில் முன்னெடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டில் மழையுடன் கூடிய கால­நி­லையைத் தொடர்ந்து, டெங்கு நோய்த்­தாக்கம் அதி­க­ரித்­துள்­ள­தாக குறிப்­பிடப்படு­கின்­றது. வடக்கு, கிழக்கு, மலை­யகம் உட்­பட நாட்டின் அனைத்துப் பிர­தே­சங்­க­ளிலும் டெங்கு நோயா­ளர்கள் இனங்காணப்­பட்­டுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து, சுகா­தார அமைச்­சினால், டெங்­குநோய் தொடர்பில் பொது மக்­களின் விசேட கவனம் ஈர்க்­கப்­பட்­டுள்­ளது. செப்டெம்பர் 06ம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் நாட்டில் மொத்தம் 360 பேர் மர­ணித்­துள்­ள­தா­கவும் 148,898 பேர் டெங்கு நோய்த் தாக்­கத்­திற்­குள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் சுகா­தார அமைச்சின் தகவல் தெரி­விக்­கின்­றது.

கொழும்பு, கம்­பஹா, களுத்­துறை, குரு­நாகல், புத்­தளம், இரத்­தி­ன­புரி, கேகாலை, காலி, மாத்­தறை, கண்டி, யாழ்ப்­பாணம், மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை மற்றும் கல்­முனை ஆகிய பிர­தே­சங்கள் டெங்கு அபாயப் பிர­தே­சங்­க­ளாக சுகா­தார அமைச்­சினால் கண்­ட­றி­யப்­­பட்­டுள்­ளது.

குறித்த டெங்கு ஒழிப்பு வாரத்தில் சுமார் 3000 குழுக்கள் டெங்கு நுளம்பு ஒழிப்புப் பணியில் ஈடு­ப­ட­வுள்­ளன. ஜனா­தி­பதி விசேட செய­லணி, ஆயுதப் படை­யினர், சுகா­தார திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர்கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பினர் பணியில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். வீடுகள், நிர்­மாணப் பணிகள் இடம்­பெறும் இடங்கள், மத ஸ்தாப­னங்கள், பாட­சா­லைகள் என்­பன டெங்கு பரவும் பிர­தான இடங்­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன.

காய்ச்சல் இரு நாட்­க­ளுக்கு நீடிக்­கு­மானால், அரு­கி­லுள்ள அரச வைத்­தி­ய­சா­லையில் அல்­லது தரம் வாய்ந்த வைத்­தி­ய­ரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்­டு­மென பொது­மக்கள் அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­றனர். அத்துடன், சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமடையாது நீடிக்குமானால் முறையான இரத்தப் பரிசோதனை அவசியமெனவும் டெங்கு தொடர்பில் அலட்சியம் வேண்டாம் எனவும் வலியுறுத்தப்படுகின்றது.

Related Posts