தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருக்கு எதிராக வழக்கு

தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு எதிராக லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.தேசிய சேமிப்பு வங்கி மற்றும் தி பினான்ஸ் கம்பனிக்கும் இடையிலான பங்குக் கொடுக்கல், வாங்கல் விவகாரங்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்கு மூலமொன்றை பதிவு செய்து கொள்வதற்காக தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசத்தை ஆணைக்குழு அழைத்துள்ளது.

மோசடியான முறையில் இந்த கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தி பினான்ஸ் கம்பனியின் 30-31ரூபா பெறுமதியான பங்குகளை, தேசிய சேமிப்பு வங்கி 50 ரூபா கொள்வனவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Related Posts