Ad Widget

தேசிய, சமூக வீடியோ கதையாக்கப் போட்டி – 2016

இலங்கையில் முதல் தடவையாக தேசிய சமூக வீடியோ கதையாக்கப் போட்டியொன்றை நடத்த இலங்கை அபிவிருத்தி ஊடக நிலையம் தீர்மானித்துள்ளது.

நோக்கம்
பிரதான நிலை ஊடகங்களில் தமது குரலுக்கான உரிய இடமும் பிரதிநிதித்துவமும் கிடைக்காத மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை ஒரே நிமிடத்தில் வீடியோ கதையாக சித்திரிக்கும் இளைஞர் யுவதிகளை அடயாளம் காண்பது இப்போட்டியின் நோக்கமாகும்.

சமூக ஊடகத்தில் அதிக அக்கறை காட்டிவரும் இளைஞர் யுவதிகள் மத்தியில் சமூக வீடியோ கதையாக்கத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துதல் மற்றுமொரு நோக்கமாகும்.

சமூக வீடியோ கதை என்றால் என்ன?
சமூக வீடியோ கதை என்பது மக்கள், மக்களுக்காக மக்கள் பங்கேற்புடன் தயாரிக்கப்படும் வீடியோ கதையாகும். வீடியோ செய்திக்கும் சமூக வீடியோ கதையும் ஒன்றல்ல. இவற்றுக்கிடையில் அதிக வித்தியசங்கள் உள்ளன. செய்தி ஒரு தனி நபரால் தயாரிக்கபடுவது. ஆனால், சமூக வீடியோ கதை என்பது அவ்வாறல்ல. அது மக்கள் பங்கேற்புடன், மக்களின் ஆலோசனையுடன், மக்களின் கருத்துக்களை உள்வாங்கித் தயாரிக்கப்படுவதாகும்.

வீடியோ செய்தியாக்கத்தில் செய்தியாளரின் ஆதிக்கமும் நோக்கு நிலையும் மிகைத்து நிற்கும். ஆனால், சமூக வீடியோவில் மக்கள் கருத்தே மிகைத்து நிற்கும். பிரச்சினையை இனங்காணுதல், செய்திக்கதையை தயாரித்தல், அதனை சரிபார்த்தல், குறித்த கதையை வீடியோ செய்தல், பின்னர் எடிட் செய்தல், கடைசியாக தயாரிப்பு ஆகியனவற்றில் மக்களின் பங்கேற்பு இருக்க வேண்டும்.

பொதுவாக, அடிப்படை உரிமை மீறல், சமத்துவம், மக்கள் பங்கேற்பு, சமூக அபிவிருத்தி போன்ற துறைகளில் சமூக வீடியோ கதைகள் தயாரிக்கப்படும். இது ஆவணப்படமோ அல்லது குநற்திரைப்படமோ அல்ல என்பது கவனிக்கப்படுவதல் வேண்டும். ஒரு சமூக வீடியோ கதை சராசரியாக இரண்டு தொடக்கம் நான்கு நிமிடத்திற்குள் அடங்கும்.

போட்டிக்கான தலைப்புகள்
1. மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளும் எதிர்பார்க்கப்படும் தீர்வுகளும்
2. தொழிலுக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இடம்பெயர்ந்து வாழ்வோர்.இலங்கை
3. கலாசாரம் மற்றும் பல்வகைமை
4. கிராமிய கல்விக்கான சவால்கள்
5. தண்ணீர் மகிமை
6. பெண் மற்றும் சிறுவர் உரிமை

வீடியோ கதைக்கான கால அளவு
ஒரு நிமிடம்.
ஒரு நிமிடத்திற்கு அதிகமான கால அளவைக்கொண்ட கதைகள் தேர்வின்போது நிராகரிக்கப்படும்.

வயதெல்லை
10 தொடக்கம் 35.
இவ்வயதெல்லையை தாண்டியவர்களின் கதைகள் நிராகரிக்கப்படும்

போட்டிக்கான நிபந்தனைகள்
1. உங்கள் சமூக வீடியோ கதைகள் ஒரு உரிய தலைப்பு, கால அளவு ஆகியவற்றை பிரதிபலிக்க வேண்டும்.
2. உங்கள் வீடியோ கதையில் புத்தாக்க சிந்தனை மாத்திரமே மதிப்பிடப்படும். எனவே தொழில்நுட்பப் பயன்பாடு தொடர்பாக கவலைப்பட வேண்டியதில்லை. கையடக்கத் தெலைபேசி வாயிலாகவும் ஒளிப்பதிவு செய்யலாம்.
3. வீடியோக் கதைகள் மக்கள் பங்குபற்றலுடன் தயாரிக்கப்பட வேண்டும். நடுவர் குழு இது தொடர்பாக தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொள்ள முடியும்.
4. ஒருவர் எத்தனை வீடியோ கதைகளையும் சமர்ப்பிக்கலாம்.
5. உரிய திகதிக்குப் பிந்திக் கிடைக்கும் வீடியோக் கதைகள் நிராகரிக்கப்படும்.
6. சிறுவர்கள், பெண்கள் மற்றும் வித்தியாசமான ஆற்றலுடையோரை அகௌரவப்படுத்தும் கதைகள் நிராகரிக்கப்படும்
7. விளம்பரப் பண்புகள் கொண்ட கதைகள் கருத்திற்கொள்ளப்பட மாட்டாது.
8. சமூக வீடியோக் கதைகள் தமிழ், சிங்களம், மற்றும் ஆங்கில மொழிகளில் அமையலாம்.

விருது, சான்றிதழ் மற்றும் பரிசு
எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள இளைஞர் வீடியோ சம்மேளனத்தின் போது, தெரிவுசெய்யப்டும் தயாரிப்பாளர்களுக்கு விருது, சான்றிதழ் மற்றும் ரூ 10,000 பணப்பரிசு என்பன வழங்கப்படும்.

வீடியோ கதை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி
ஏப்ரல் 10, 2016 (திகதி நீடிக்கப்பட மாட்டாது)

எவ்வாறு சமர்ப்பிப்பது?
கதையை DVDயில் இட்டு நேரடியாக சமர்ப்பிக்கலாம். அல்லது பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கலாம். அல்லது Youtubeபில் பதிவேற்றி உரிய லிங்கை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம்.

முகவரி
தேசிய சமூக வீடியோ கதையாக்கப் போட்டி
இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம்
இல 429, நாவல, ராஜகிரிய
INFO@LDJF.ORG

0117209511, 0112877007

Related Posts